எரிபொருட்களின் விலையில் திடீர் மாற்றம்!

Friday, January 11th, 2019

நேற்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் விலை நிர்ணய குழு இன்று கூடியது.

இந்த கூட்டத்தின் போது விலைசூத்திரத்திற்கு அமைய எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில்இ 92 மற்றும் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ 101 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் 99 ரூபாவிற்கும்இ 121 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சுப்பர் டீசல் 118 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts: