எரிசக்தி அமைச்சருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு – எரிபொருள் நிலையங்களுடன் நிகழ்நேரத் தரவுகளைப் பகிரலும் செயலி – அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர்!

Friday, May 27th, 2022

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது எரிசக்தி துறையில் இலங்கை முன்னெடுக்கவுள்ள மாற்றுவழித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே

எரிபொருள் விநியோகம் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள செயலி, தற்போது பல இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலியானது, இலங்கை பொலிஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப திணைக்களம் என்பனவற்றினால் உருவாக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களைக் கண்காணிக்கவும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களுடன் நிகழ்நேரத் தரவுகளைப் பகிரவும் இந்த செயலி பயன்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள வாகனத்தின் இலக்கத் தகடு விவரம் இந்த செயலியில் உள்ளிடப்படும். அந்தத் தரவு ஏனைய வாகன பயன்பாட்டாளர்களுடன் நிகழ்நேரத்தில் பகிரப்படும்.

இலக்கத் தகடு விவரம் உள்ளீடு செய்தவுடன், அதேவாகனம் ஒரே நாளில் வேறு எந்த நிலையத்திலிருந்தும் எரிபொருளை நிரப்பியிருந்தால் அதனை இந்தச் செயலியில் அறியக்கூடியதாக இருக்கும்.

அத்துடன், குறித்த வாகனத்தின் எரிபொருள் நிரப்பப்பட்ட வரலாற்றை அந்தச் செயலி அறியமுடியும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: