எய்ட்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்து தமிழர் சாதனை!

Tuesday, April 18th, 2017

எய்ட்ஸ் நோயினை உண்டாக்கும் எச்.ஐ.வி கிருமியை அழிக்கும் மருந்தினை தமிழகத்தை சேர்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர் மாதேஸ்வரன் கண்டுபிடித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த எஸ். மாதேஸ்வரன் என்னும் மூலிகை ஆராய்ச்சியாளர் 30 ஆண்டுகளாக மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.இவர் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்ஐவி-ஐ அளிக்கும் மருந்தினை அஸ்கந்தா மற்றும் வல்லாரை மூலிகையில் இருந்து தயாரித்துள்ளார்.

2008 முதல் 2011 ஆண்டு வரை இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இரத்தம் போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவும் இந்த வைரஸினை அழிக்கும் மருந்தினை தயாரித்துள்ளார்.ஈரோட்டில் உள்ள பெருந்துறை மருத்துவ கல்லூரி, சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகம், மும்பையில் உள்ள ரெலிகேர் நிறுவனம் ஆகியவற்றில் உள்ள ஆய்வுக்கூடங்களில் ஆய்வினை மேற்கொண்டு தயாரித்துள்ள இந்த மூலிகை மருந்தினை எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு கொடுத்து உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த மூலிகை மருந்தினை மூன்று மாதங்களுக்கு உட்கொண்டால் நோய் ஆற்றல் அதிகரித்து எச்ஐவி, எச்பிவி கிருமிகள் அழிக்கப்படுகிறது. மிக குறைந்த செலவில் இந்த மருந்தினை தயாரிக்க முடியும் என கூறியுள்ளார். மேலும் நீரிழிவு நோயிற்கு திரிபலா மற்றும் நன்னாரியினை கொண்டு மூலிகையினை தயாரித்துள்ளார். தொடர்ந்து 4 மாதங்கள் இதனை உட்கொண்டால் நீரிழிவு நோய் முற்றிலும் குணப்படுத்த இயலும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: