எயார்லைன்ஸுக்கு 5.5 பில்லியன் டொலர் விலை நிர்ணயம்!
Saturday, January 21st, 2017இலங்கை விமான நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்காக 5.5 பில்லியன் டொலர் விலையை முன் வைப்பதாக பீஸ் எயார் விமான நிறுவனம் Peace Air (Private) Limited தெரிவித்தள்ளது.
மத்தளை விமான நிலையத்தின் பங்குகளை வாங்குவதற்கு 2.2 பில்லியன் டொலர் முதலீடு செய்வதற்கு தயார் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் காமினி வெத்தசிங்க கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“இலங்கை விமான நிறுவனம் மூலம் ஆண்டுக்கு சுமார் 5 மில்லியன் பயணிகள் போக்குவரத்து செய்கின்றனர். அதேபோல் பில்லியன் டொலர் வருமானம் ஈட்டக் கூடியது. இலங்கை விமான நிறுவனம் இலாபம் ஈட்டக் கூடிய நிறுவனம். எனினும் இதனை நிர்வகிப்பவர்கள் தான் நிதியை தவறாக பயன்படுத்துகின்றனர்.
மிஹின் லங்கா மூலம் சுமார் 400 பேருக்கு தொழில் இல்லாமல் போனது. அவர்கள் எங்கே செல்வது? இந்த தொழிலை இழந்தால் அவர்களுக்கு வேறு தொழில் இல்லை. நான் அவர்களுக்கு மீண்டும் தொழில் வழங்குவேன். அத்துடன் இலங்கை விமான நிறுவனத்தின் உயர் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவேன்” என்று அவர் கூறினார்.
Related posts:
|
|