எம் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்: உங்கள் எதிர்காலம் நாளை விடியல்பெறும் – யாழ் மாநகர முன்னாள் மேயர் திருமதி பற்கணராஜா!

Sunday, December 17th, 2017

உள்ளூராட்சி மன்றங்களே ஒவ்வொரு பிரதேசத்தினதும் பொருளாதார அபிவிருத்திகளையும் உட்கட்டுமாணங்களையும் மேம்படுத்தும் சக்திகொண்டதாக இருக்கின்றது. இந்த மன்றங்களை மக்கள் மீது அக்கறையும் அதனை சிறப்பாக செயற்படுத்தவதில் ஆளுமையும் உள்ளவர்களே ஆளுகை செய்யவேண்டும். அதற்கான தெரிவாகவே இன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை மக்கள் பெருவெற்றியடையவைக்க காத்திருக்கின்றனர் என யாழ் மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

கொக்குவில் மேற்கு ஐயனார் ஆலய முன்னலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த 5 ஆம் வட்டார பகுதி மக்களுடனான உள்ளூராட்சி மன்ற தேரர்தல் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் நாம் எமது ஆழுகைக்கட்பட்ட பிரதேச சபைகளின் மக்களதும் அப்பகுதிகளின் அபிவிருத்தியிலும் காட்டியிரந்த அக்கறையானது இன்று காணப்படாத நிலையால் எமது மக்கள் இன்று பல்வேறு வகையான துன்ப தயரங்களை சுமந்த வாழ்ந்தவருகின்றனர்.

இந்நிலையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கடந்த காலங்களில் தனக்கு கிடைத்த சிறியளவிலான அரசியல் பலத்தை கொண்டு செய்த பெரும்பணிகளை இன்று மீட்டிப்பார்க்கின்றநிலைக்கு வந்தள்ளனர்.

அந்தவகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் மக்கள் கைகோர்க்கத் தயாராகிவிட்டனர். இதனால் வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பெரு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. கிடைக்கப்பெறும் வெற்றியினூடாக எமது மக்களின் தொடர் கண்ணீருக்கு முற்றுப்புள்ளிவைத்து அவர்களது வாழ்வில் நிரந்தர புன்னகையை உருவாக்க நாம் காத்திருக்கின்றோம்  – என்றார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.

DSC_0295

Related posts: