எம்.பிக்களின் வரவை இனிமேல் பார்க்கலாம்!
Monday, April 3rd, 2017
எம்.பிக்கள், நாடாளுமன்றத்துக்கு வருகைதந்து சபை அமர்வுகளில் பங்கேற்பது, ஏனைய குழுக்களின் கூட்டங்களில் பங்கேற்பது உள்ளிட்ட விவரங்களே, நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக வெளியிடப்படவிருக்கின்றன.
சபையமர்பில் பங்கேற்கும் உறுப்பினர்கள், கண்காணிப்புக் குழுக் கூட்டங்களில் பங்கேற்கும் உறுப்பினர்கள், பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழு உள்ளிட்ட சகல குழுக்களின் கூட்டங்களிலும் பங்கேற்கும் உறுப்பினர்களின் விவரம், சமுகம்தராதவர்களின் விவரம் ஆகியவற்றை, அந்த இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
இந்த விவரங்கள், மே மாதம் முதல் நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக வெளியிடப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய, சகல உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார் என்று அறிய முடிகின்றது.
தகவலறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம், மேற்கண்ட விவரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தகவல்கள் வெளியிடப்படவுள்ளன. 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் 2016 டிசெம்பர் 01 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு உரிய தகவல்களே கோரப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட தகவலை மாதத்துக்கு ஒருமுறை எதிர்காலங்களில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத் தகவல் தெரிவிக்கின்றது.
Related posts:
|
|