எமது வெற்றிக்கு பசில் ராஜபக்சவே காரணம் – ராஜபக்ச சகோதாரர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்த நினைப்போர் வெற்றிபெற முடியாது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Sunday, March 14th, 2021

ராஜபக்ச குடும்பத்திற்குள் மோதல்களை உருவாக்குவதற்கு பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதிலும் அந்த குடும்பத்தை அரசியல் மூலம் பிரிக்க முடியாது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆசியா முழுவதிலுமே மிகச்சிறந்த தலைவர் மகிந்த ராஜபக்ச என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவரது அரசியல் பரிச்சயம் முதிர்ச்சி அறிவு தலைமைத்துவம் போன்றறை எவருடனும் ஒப்பிடமுடியாதவை என நான் கருதுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் கட்சிக்கு தலைமை தாங்கும்போது நான் நாட்டிற்கு தலைமை தாங்குவது எனக்கு பெரும் ஆறுதலாகயிருக்கிறது என்றும் தெரிவித்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச  எங்களது வெற்றிக்கான பயணத்தில் முக்கிய காரணி மகிந்த ராஜபக்சவே என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சியொன்றை உருவாக்கி வெற்றியொன்றை சாத்தியமாக்கியவர் பசில் ராஜபக்சவே என்பதை எந்த வித விவாதங்களுமின்றி நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இத்தகைய தலைவர்களுடன் அரசாங்கமொன்றை தொடர்வதே எனக்கு சாதகமான விடயம் எனவும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டுள்ளார்

Related posts: