எமது மக்களுக்கு ஏமற்றங்கள் இனியும் வேண்டாம் – ஈ.பி.டி.பியின் வவுனியா மாவட்ட நிர்வாவ செயலாளர் திலீபன்.
Saturday, October 19th, 2019தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சுயனலன்களாலும் இதர தரப்பினரது பாரபட்சங்களாலும் பாகுபாடுகளாலும் அவலப்பட்டுவரும் வவுனியா மாவட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வுகள் கிடைக்க வேண்டுமானால் வரவுள்ள ஆட்சி மாற்றத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரங்களை பலப்படுத்த இம்மாவட்ட மக்கள் உறுதிபூணவேண்டும் என கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுளா ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தின் தாலிக்குளம் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரான கோட்டபய ராஜபக்சவின் வெற்றியை உறுதிசெய்யும் முகமாக நடைபெற்ற ஆதரவு பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்தகாலங்களில் தமிழ் மக்கள் கூட்டமைப்பினரின் கபடத்தனங்களுக்குள் வீழ்ந்தது மட்டுமல்லாது தமது வாழ்வியலையும் பறிகொடுக்க நேரிட்டது.
அதுமட்டுமல்லாது வவுனியா மாவட்ட தமிழ் மக்களை சில அரியல்வாதிகள் அசிமைகளாகவும் நடத்த முற்பட்டனர்.
இதனால் இந்த மாவட்ட மக்கள் தமக்கான அனைத்து தேவைப்பாடுகளையும் சலுகைகளையும் பறிகொடுத்தனர்.
அந்தவகையில் இனியும் இவ்வாறான நிலைமைகள் எமது மக்களுக்கு வேண்டாம்.
எமது மக்கள் தமது வாழ்வியலை தூக்கி நிறுத்துவதற்கும் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கவும் தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எமது கட்சியின் செயலாளர் நாயகம் காட்டும் பாதைக்கு நீங்கள் உங்கள் ஆதரவுப் பலதை கொடுத்து கோட்டபய ரஜபக்சவின் வெற்றி யை உறுதி செய்யுங்கள்.
உங்கள் துயரங்களுகான் தீர்வுகளை எமது தலைவர் பெற்றுத்தந்து உங்கள் வாழ்வை ஒளிமனதாக உருவாக்க்கிக் காச்டுவார் என்றார்.
Related posts:
|
|