“எமது நாடு எமது கைகளில்” பிரதமர் மஹிந்த தலைமையில் நாளை சிறுவர் தின விழா!

சிறுவர்கள் ஒழுங்கான முறையில் வழி நடத்தப்படுகின்றார்கள் என்பதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு அனைவருடையது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து சிறுவர்களுக்கும் அவசியமான ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் இலவசக் கல்வியை உறுதிப்படுத்த அரசாங்கம் உறுதிகொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறுவர்கள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் அவசியப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்க்கது.
இதனிடையே சர்வதேச சிறுவர் தினமான இன்று “எமது நாடு எமது கைகளில்” என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் இம்முறை கொண்டாடப்படுகின்றது.
எனினும், இலங்கையில் சிறுவர் தின தேசிய விழா நாளை நடைபெற உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் பத்தரமுல்ல அபே கமவில் தேசிய சிறுவர் தின விழா இடம்பெறவுள்ளது.
இதேவேளை, நாட்டின் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்’துடன் சர்வதேச முதியோர் தினமும் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|