எமது அபிவிருத்திக்கு நாமே தடையாக உள்ளோம் – யாழ்.மாவட்டச் செயலர் !

Wednesday, July 19th, 2017

எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு நாமே தடையாக இருக்கிறாம். நல்லதைச் செய்தாலும் எதிர்க்கிறோம். அப்படியாயின் எவ்வாறு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார் யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயகன்.

கடல் நீரை குடிதண்ணீராக்கும் திட்டம் தொடர்பான வேலைப்பட்டறை மற்றும் அனுபவப் பகிர்வுக் கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது. அதில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது.

யாழ்.மாவட்டத்தில் தண்ணீர்ப் பிரச்சினைகள் அதிகரித்துச் செல்கின்றன. இராணுவத்தினர் அதிகமாக தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். குடிதண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகின்றது. மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியாத நிலமைகள் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவுக்குப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, கடல் நீரைக் குடிதண்ணீராக்கும் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அங்கு சுற்றாடல் அமைச்சு மிக கடுமையான சட்டத்தையும் நடைமுறைகளையும் கொண்டுள்ளது. இவ்வாறான திட்டங்களை அங்க நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள் யாழ். எதைக் கூறினாலும் எமக்கு சுத்தமான தண்ணீர் தேவை. அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். என்றார்.

Related posts: