“எனது இதயத்தின் ஆழத்திலிருந்து அனைவருக்கும் நன்றிகள்” – நன்றிநவிலல் செய்திக் குறிப்பில் ஈ.பி.டி.பியின் தவிசாளர் மித்திரன்!

Monday, February 1st, 2021

எனது பாசமிகு தாயார், காலம் சென்ற லூர்தம்மா மரியாம்பிள்ளை அவர்களின் மரணச் செய்தியறிந்ததும் உலகின் பல பாகங்களில் இருந்தும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் , தோழர்கள் ஆகிய நீங்கள், பல்வேறு வழிகளில் அனுதாபச் செய்திகளையும் மலர் வளையங்களையும் அனுப்பியிருந்ருந்த அனைவருக்கும் தனது மனம்நிறைந்த நன்றிகளை தெரிவிப்பாதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது – 

எனது தாயாரின் இறுதிச் சடங்குகளின் போது என்னால் கலந்து கொள்ள முடியவல்லையே என்ற குறையை நீக்கும் வகையில் உதவிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் மாண்புமிகு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் , கட்சியின் தோழர்களுக்கும், ஏனையோருக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் .

மேலும், அனுதாபச் செய்திகள் அனுப்பிய சக அரசியல் கட்சிகளின் நண்பர்களுக்கும் , குறிப்பாக மரணச்சடங்கில் கலந்துகொண்ட, சமூக ஜனநாயக் கட்சி தலைவர், தோழர் சிறீதரன் திருநாவுக்கரசு அவர்களுக்கும் மற்றும் தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் இறுதி மரியாதை நிகழ்வுகளை முன்னின்று நடத்திய , மதகுருமார்களுக்கும் , கன்னியாஸ்திரிகளுக்கும் மற்றும் உற்றார், உறவினர்களுக்கும் , நவாலியூர் மக்களுக்கும்  எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ள தவிசாளர் மித்திரன் அம்மா புகட்டிய நேர்மை என்ற பாதையில் தொடர்ந்தும் பயணிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் மரியாம்பிள்ள லூர்த்தம்மா கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வயது மூப்பின் காரணமாக  தனது 89 ஆவது வயதில் காலமாகியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: