எந்த நேரத்திலும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக்காட்டத் தயார் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
Tuesday, April 26th, 2022நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை எந்த நேரத்திலும் நிரூபித்து காட்ட தயாராக இருப்பதாகவும் பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இன்னும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வசமே இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தற்போது, வேறு அணியினருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின், ஊடக சந்திப்புகளை நடத்தி கதைகளை கூறாது அதனை நாடாளுமன்றத்தில் நிரூபித்து காட்ட வேண்டும் எனவும் சாகர காரியவசம் பதிலளித்துள்ளார்
அதேவேளை பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் 124 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கூறியுள்ளார். அவர்கள் ஏற்கனவே பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கான தமது ஆதரவை எழுத்து மூலம் வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, தீர்மானத்திற்கு ஆதரவளிக்க 113 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அத்துடன் அரசாங்கத்தில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்க இணங்கியுள்ளனர்.
அதேவேளை, அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருக்கு ஆளும் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|