எந்த தேர்தலுக்கும் தயார் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
Saturday, June 10th, 2023எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு கூட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை மற்றும் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் குறித்தும் இதன்போது ஊடகவியாளர்களினால் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
குறித்த சட்டமூலத்தை தான் இதுவரை பார்க்கவில்லை என்றும் தற்போது நாட்டில் சுதந்திரமான ஊடகம் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொடிகாமம் - பருத்தித்துறை வீதி எப்போது காப்பெற் வீதியாகும்? - மக்கள் கோரிக்கை!
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – இலங்கை கடற்படைத் தளபதி சந்திப்பு - இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங...
மற்றுமொரு நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அற...
|
|