எந்த ஒரு காரணத்திற்காகவும் பொது மக்களை வீடுகளிலிருந்து வெளியேற இடமளிக்க வேண்டாம் – ஜனாதிபதி அறிவித்துள்ள அவசர உத்தரவு!

Friday, March 27th, 2020

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

அனைத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு காரணத்திற்காகவும் பொது மக்களுக்கு வீதியிலோ அல்லது குறுக்கு வீதிகளிலோ வீடுகளிலிருந்து வெளியேறி இருப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தின் உத்தரவிற்கு அமைய செயற்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் கடுமையான முறையில் முன்னெடுக்கப்படும் என அறிவுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அரச மருந்தகங்கள் தவிர அனைத்து மருந்தகங்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts: