எந்தவொரு பிள்ளைக்கும் அநீதி இடம்பெறாது – ஜனாதிபதி உறுதி

Sunday, July 8th, 2018

நாட்டில் எந்தவொரு பிள்ளைக்கும் கல்வியில் அநீதி இடம்பெற இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனைத்து பிள்ளைகளினதும் எதிர்காலம் குறித்து உரிய கவனம் செலுத்த தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் இலவச கல்வியைப் பலப்படுத்தி அரசாங்க பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான அனைத்து மனித மற்றும் பௌதீக வளங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுபோல அரச சார்பற்ற கல்வி நிறுவனங்களையும் பலப்படுத்தும் கொள்கையை அரசாங்கம் என்ற வகையில் ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட சைட்டம் நிறுவனத்தின் மாணவர்களுக்காக அந்த மருத்துவ பீடத்தின் இட வசதி மற்றும் ஏனைய தேவைகளை மேம்படுத்துவது குறித்து முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts: