எந்தவொரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை – பொதுஜன பெரமுன அறிவிப்பு!

எந்த ஒரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியத் தலைவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் காணொளிகளில் உண்மையில்லை என அந்தக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் உயர்பீட தலைவர்கள் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டிலேயே தங்கியிருப்பார்கள் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆராய்ந்த பின்பே முஸ்லிம்களுக்குக் காணி: யாழ்.பிரதேச செயலர் தெரிவிப்பு!
நீதிமன்றங்களின் உள்ளகநிர்வாக பணிகள் நாளைமுதல் ஆரம்பம்!
இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!
|
|