எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை – மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் அமைச்சரவைக்கு அழைப்பு!

எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (04) அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கி ஊழியர்கள் அண்மையில் தமது சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் இது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மத்திய வங்கி அதிகாரிகள் இவ்வாறு சம்பளத்தை உயர்த்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்று பிற்பகல் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு மத்திய வங்கியின் பிரதானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாளை (05) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கும் மத்திய வங்கியின் பிரதானிகள் அழைக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பில் வினவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|