எந்தவொரு தட்டுப்பாடும் நாட்டில் கிடையாது – பிரதமர்!

நாட்டில் எந்தவொரு மருந்துப்பொருட்களுக்கோ, உணவுப்பொருட்களுக்கோ, எரிபொருளுக்கோ தட்டுப்பாடு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் நேற்று வெளியிட்ட விசேட அறிவிப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ்ஸை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
சீனாவில் இந்த வைரஸ் தொற்று பரவிய சந்தர்ப்பத்தில் அங்குள்ள இலங்கையர்களை மீட்கும் பொருட்டு ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக இலங்கை செயற்பட்டிருந்தது.
அதேபோன்று தற்போதும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகின்றன.
விமான சேவைகளை இடைநிறுத்தியும், நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பித்தும் இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவே நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டத்தை பிரகனப்படுத்துவதற்கு நேரிட்டது.
மக்களின் நலன் தொடர்பில் சிந்தித்து அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
உணவு, மருந்துப்பொருட்கள், எரிப்பொருள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது ஆகவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
Related posts:
|
|