எந்தவொரு காரணங்களுக்காகவும் இலங்கை மத்திய வங்கியால் புதிதாக பணம் அச்சிடவில்லை – அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன!

Thursday, June 4th, 2020

இலங்கை மத்திய வங்கி புதிதாக பணம் அச்சிடவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றுகாலை அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி 2 மில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக சில ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய பணம் அச்சிடப்பட்டால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி லட்ஷ்மன் ஆகியோரின் கையொப்பங்கள் இருக்க வேண்டும் என்பதோடு, அவ்வாறான கையொப்பத்துடன் நாணயத்தாள்கள் இருந்தால் அதனைக் கொண்டு வந்து காட்டுமாறும் அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது சவால் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: