எந்தவொரு ஊழியரினதும் சம்பளத்தையும் குறைப்பதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது – அமைச்சர் டளஸ் அழகபெரும அறிவிப்பு!

Tuesday, August 24th, 2021

அரசாங்கத்திலுள்ள எந்தவொரு ஊழியரினதும் சம்பளத்தை குறைப்பதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்குமாறு எந்தவொரு அரசியல்வாதிகளும் யோசனைகளை முன்வைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்பதாக இது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் சமூகவலைத்தளங்களில் செய்திகளாக வலம்வந்திருந்த நிலையில் பல்வேறு விமர்சனங்களும் எழுந்திருந்தன.

இந்நிலையில் அரசாங்கத்திலுள்ள எந்தவொரு ஊழியரினதும் சம்பளத்தை குறைப்பதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் தெரிவித்துள்ளமையை அடுத்து குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: