எதுவுமே தெரியாது: பிணைமுறி ஆணைக்குழு முன் அமைச்சர் ரவி கைவிரிப்பு!  

Friday, August 4th, 2017

மத்திய வங்கி பிணை முறி ஆணைகுழு முன் ஆஜராகி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கா அவ்விடயங்கள் பற்றி தனக்கு எதுவுமே தெரியாதென கைவிரித்தார்.
அப்போது இடைமறித்த   அடிசனல் சொலிசிட்டர் ஜெனரல் (Additional Solicitor General)   பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை உண்டு என ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.
இதன்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றிற்கான விடைகளும் :
கே : பென்ட்  ஹவ்ஸ்(pent house) அர்ஜுன் அலோசியஸ்ஸால்  வாடகைக்கு பெறப்பட்டு நீங்கள் வசிப்பதற்குக் கொடுக்கப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியாதா?
விஎதுவும் தெரியாது
கேபென்ட்  ஹவ்ஸ்(pent house) வாடகைக்கு பெறப்பட்டது பற்றியோ அல்லது கொள்வனவு செய்யப்பட்டது பற்றியோ உமது மனைவியும் உமக்கு அறிவிக்கவில்லையா?
வி : இல்லை. இந்த விடயம் பற்றி பா.உ. மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் இது பற்றி பிரஸ்தாபித்ததன் பின்பே குடும்பத்தவர்களிடம் வினவினேன்.  இந்த வீடு அர்ஜுன் அலோசியஸ்ஸால் பெறப்பட்டு கையளிக்கப்பட்டது தெரிந்திருந்தால் நான் அங்கு குடியேறியிருக்கமாட்டேன்.
கே : அர்ஜுன் அலோசியஸ் குடும்பத்தை முன்கூட்டியே தெரியுமா?
விஆம். அவர்களின் குடும்பம் எமது நீண்ட கால நண்பர்கள்.
இவரின் விடைகளை ஜீரணிக்க முடியாத ஏ . எஸ். ஜி பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை உண்டு என ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

Related posts: