எதிர்வரும் 9 ஆம் திகதி இந்தியப் பிரதமர் இலங்கை விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடி எதிர்வரும் 09 ஆம் திகதி இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி செயலகத்தில் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து இடம்பெறும் பேச்சுவார்த்தையில் இந்திய – இலங்கை விவகாரங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இலங்கையின் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து தீவிரவாத எதிர்ப்பு செயற்பாடுகள் தொடர்பாகவும் பேசப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
எலிக்காய்ச்சல் காரணமாக 19 பேர் மரணம்!
அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான முதற்கட்ட நேர்முக தேர்வுகள் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்...
கப்பலிலிருந்து விழுந்த கொள்கலன்களுக்கு அருகில் செல்லவேண்டாம்!
|
|