எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது ஊடரங்குச் சட்டம் !

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது..
முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கொவிட் செயலணிக் கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவும் தனது ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதற்கு இதுவே காரணம்!
விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு!
கொரோனா வைரஸ் தாக்குவது எப்படி? – வெளியானது இலங்கை பேராசிரியர் கூறும் புதிய தகவல்!
|
|