எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் நாடளாவிய சுகாதார வழிகாட்டல் நடைமுறையில் மாற்றம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, July 2nd, 2021

நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை 5 ஆம் திகதிமுதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள் உள்ளடங்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய கொரோனா சூழ்நிலையை மீளாய்வு செய்துள்ள நிலையில் இந்த புதிய வழி முறைகளை உள்ளடக்கிய சுற்றறிக்கை எதிர்வரும் 5ஆம் திகதி  வெளியிடப்படவுள்ளதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் தம்மிகா ஜயலத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் விசேட தொழில்நுட்ப குழு நாட்டில் கொரோனா பரவல் தொடர்பில் மீளாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கள் முழு நாட்டுக்கும் மேல் மாகாணத்திற்கும் என தனியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை மேல் மாகாணத்தில் தடை செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளை மீறி செயற்பட்ட புடைவை வர்த்தக நிறுவனங்கள் சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டு பின்னர் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: