எதிர்வரும் 30 ஆம் திகதி வேலணைப் பிரதேசசபையில் தேசிய வாசிப்புவிழா!

Wednesday, November 28th, 2018

 

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில் வழங்கல் விழா எதிர்வரும் 30 ஆம் திகதி வேலணைப் பிரதேசசபையால் நடத்தப்படவுள்ளதாக தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 10 மணிக்கு வேலணைப்பிரதேசசபையின் தேவா திறந்தவெளி அரங்கில் நடைபெறவுள்ளதாகவும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவனும் சிறப்பு விருந்தினர்களாக பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் முருகனேசன், வேலணை உதவிப் பிரதேச செயலர் கமலராஜனும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

46906609_489823438194699_6269196975506194432_n

Related posts: