எதிர்வரும் 3 வருடங்களுக்குள் பாடசாலை வகுப்புக்களில் மாணவர்களின் எண்ணிக்கை

Sunday, June 18th, 2017

எதிர்வரும் 3 வருடங்களுக்குள் பாடசாலை வகுப்புக்களில் மாணவர்களின் எண்ணிக்கையை 35ஆக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் இதனை தெரிவித்தார்

தற்போது பாடசாலைகளில் 39 மாணவர்கள் ஒரு வகுப்பறையில் அதிக பட்சமாக உள்வாங்கபடுகின்றனர்

அவர்களை 35 ஆக மட்டுப்படுத்தி ஏனைய மாணவர்களை அருகில் உள்ள பாடசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தற்போது அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை என்ற திட்டத்தின் அடிப்படையில் சிறந்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்

Related posts: