எதிர்வரும் 3 நாட்களில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலை வீழ்ச்சியடையும் – எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Friday, April 22nd, 2022

350 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு, இந்த மாதத்திற்கு வழங்க வேண்டிய எரிபொருளை வழங்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுக்கவில்லையென தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், வீதிகளை இடைமறித்து முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் காரணமாக, எரிபொருளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் சாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொத்த களஞ்சியத் தொகுதியில், எதிர்வரும் சில நாட்களுக்கு அவசியான எரிபொருள் உள்ள நிலையில், அதனை சிக்கலின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதன்மூலம், எதிர்வரும் 3 நாட்களில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலை வீழ்ச்சியடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: