எதிர்வரும் 3 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் – கட்சி தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து தீர்மானம்!

Thursday, October 29th, 2020

எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய அன்றைய தினம் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் வாரத்திற்குள் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாக நாடாளுமன்ற குழுவின் விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் கட்சி தலைவர்களுக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நாடாளுமன்றத்திலுள்ள 25 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற பொலிஸ் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புபட்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொவிட்-19 ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: