எதிர்வரும் 29 ஆம் திகதி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனங்கள்!
Friday, April 19th, 2019நாடு முழுவதும் உள்ள அரச பாடசாரலைகளுக்கான விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் பதவிக்காகச் சுமார் 3 ஆயிரத்து 850 பேருக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த நியமனக் கடிதங்கள் தலைமை அமைச்சர் அலுவலகத்தில் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச பாடசாலையில் விளையாட்டுத்துறையை விருத்தி செய்வதற்காகக் கல்வி அமைச்சு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் பதவி வெற்றிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்திருந்தது.
அதற்கான நாடளாவிய ரீதியில் தேசிய மாகாண மட்டங்களில் சாதனை புரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவர்களில் தகைமை அடிப்படையில் 3 ஆயிரத்து 850 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நியமனங்கள் நீண்டகாலமாக இழுபறியில் இருந்தன. இந்த நியமனங்களுக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் தமக்கு நியமனங்களை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது அந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
Related posts:
|
|