எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, April 19th, 2021

நாட்டின் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதிமுதல் அனைத்து ஆண்டுகளுக்குமான பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு மத்தியில் மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பித்து, குழுக்களாக மாணவர்களை அழைத்து கற்கை நெறிகளை நடத்துவதற்கு அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டிகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் சுமார் ஒரு வருட காலமாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இணைய வழி தொழில்நுட்பத்தில் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (19) மீண்டும் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

Related posts: