எதிர்வரும் 25ஆம் திகதியுடன் கலைக்கப்படுகிறது வடக்கு மாகாணசபை!
Tuesday, October 2nd, 2018எதிர்வரும் 25ஆம் திகதியும் வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருவதுடன்; ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் அதன் ஆட்சி பொறுப்பு வரவுள்ளது.
மாகாணசபை தேர்தல் தொடர்பில் பெரும் இழுபறி நிலை தோன்றியுள்ள நிலையில் வடக்கு மாகாணசபை, மத்தியமாகாணசபை, மற்றும் வடமேல் மாகாணசபை ஆகிய மூன்றினதும் கால எல்லை இம்மாதத்துடன் நிறைவடையவுள்ளன.
வடமேல் மாகாணசபை எதிர்வரும் 08ம் திகதியும், மத்தியமாகாண சபை எதிர்வரும் 10ம் திகதியும், வடக்கு மாகாணசபை எதிர்வரும் 25ம் திகதியும் கலைக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏற்கனவே கடந்த வருடத்துடன் நிறைவடைந்த சப்ரகமுவமாகாணசபை, கிழக்கு மாகாணசபை வடமத்திய மாகாணசபை ஆகிய மூன்றும் ஆளுநர்களின் கீழ் இயங்கிவருகின்றன.
இதேவேளை எல்லை நிர்ணயகுழுவின் அறிக்கையில் குறைபாடுகள், சிக்கல்கள் காரணமாக மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கையை ஆராயும் பிரதமர் தலைமையிலான மீளாய்வுக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு இரண்டுமாத காலம் தேவைப்படுவதாகவும், அதற்குப் பின்னரே மாகாணசபை தேர்தல்களை நடத்துவதுதொடர்பான அறிவித்தல்களை விடமுடியும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|