எதிர்வரும் 23ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு விஜயம்!

Monday, February 1st, 2021

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என வெளியுறவு செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கொழும்புக்கான மூன்று நாட்கள் விஜயத்தின் ஒரு மாதத்திற்குப் பின்னர் இம்ரான்கானின் இந்த விஜயம் அமையவுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தார்.

யுத்த காலத்தில் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கிய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். அத்துடன் கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகித்ததுவரம் நிலையில் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: