எதிர்வரும் 22 ஆம் திகதி தொகுதி மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம்! 

Thursday, March 15th, 2018

எதிர்வரும் 22 ஆம் திகதி மாகாண சபைகள் தேர்தல் தொகுதி மீள்நிர்ணய அறிக்கை பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக் குழு மேற்கொண்டுள்ளதாக அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு புதிய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தல் தொகுதிகளை மீள்நிர்ணயம் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் கீழ் 50 சதவீதம் வட்டாரமுறைமையிலும், 50 சதவீதம் விகிதாசார முறைமையிலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இதன்படி புதிய மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வதற்காக, முன்னாள் நில அளவீட்டு ஆணையாளர் நாயகம் கனகரத்தினம் தவலிங்கம் தலைமையிலான ஐந்துபேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி இந்த குழு தமது அறிக்கையை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஃபைசர் முஸ்தபாவிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: