எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் – பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர அறிவிப்பு!

Sunday, October 17th, 2021

எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி 128 ரயில்களை சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் என ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், கண்டி, மாத்தறை, பெலியத்த, காலி, மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளுக்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: