எதிர்வரும் 21ஆம் திகதி மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிக்கத் திட்டம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Monday, October 11th, 2021

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்தப்படும் என்று தற்போது சுகாதார பிரிவினால் உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்..

இதன்படி மாகாணங்களுக்கு இடையில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்களுக்காக விசேட பேருந்து சேவையை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: