எதிர்வரும் 21ஆம் திகதி சூரியக்கிரகணம்!

Thursday, June 4th, 2020

இந்த வருடத்துக்கான சூரியக்கிரகணம் ஜூன் 21ம் திகதி இலங்கைக்கு தெளிவாக தென்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல்துறையின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு இயக்குநர் பேராசிரியர் சந்தன ஜயரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சூரியக்கிரகணம் ஜூன் 21ம் திகதி முற்பகல் 10.29 முதல் பிற்பகல் 1.19 வரை இலங்கைக்கு பகுதியளவில் தென்படும்.

இதேவேளை பகுதியளவான சந்திரகிரகணம் நாளை மறுநாள் ஜூன் 5ம் திகதி பூமியின் நிழல் சந்திரனின் விழும்போது இலங்கை நேரப்படி இரவு 11.15 அளவில் ஆரம்பமாகும் என்றும் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இது 6ம் திகதி அதிகாலை 2.34 அளவில் நிறைவு பெறும். பகுதியளவான சந்திரக்கிரகணம் பொதுவாக ஸ்ரோபரி சந்திரக்கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

சந்திரக்கிரகணத்தில் உச்ச நிலை ஜூன் 6ம் திகதி அதிகாலை 12.04 நிகழவிருக்கிறது இது இலங்கைக்கு தெளிவாக தென்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூரணைக்காலங்களில் சந்திரக்கிரகணம் நிகழ்கிறது.

இதன்போது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது சூரியனின் ஒளி, சந்திரனை அடைவது பகுதியளவில் அல்லது முழுமையாக தடைப்படுகிறது.

Related posts: