எதிர்வரும் 19 முதல் இலங்கைக்கு GSP+

Wednesday, May 17th, 2017

ஜிஎஸ்பி பிளஸ் வரி நிவாரணம் எதிர்வரும் 19ம் திகதி முதல் இலங்கைக்கு மீண்டும் கிடைப்பதாக ஐரோப்பிய ஒன்றயம் தெரிவித்துள்ளது.இந்த சலுகைகளை பெறுவதற்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளில் குறிப்பிட்ட விதிகள் சில நீக்கப்பட்டுள்ளன.

மேலும் சில விதிமுறைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெளிவுபடுத்தும் மாநாடு ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவரினால் இன்று இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது