எதிர்வரும் 19 ஆம் திகதியன்று கட்சி செயலாளர்கள் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையில் விசேட சந்திப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்!

Monday, August 2nd, 2021

அரசியல் கட்சியின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பானது அன்றையதினம் முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்போது அடுத்த தேர்தல் மற்றும் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேநேரம், தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரையில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவிப்பதற்கும் இதன்போது எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: