எதிர்வரும் 18ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்ச தலைமையில் கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம்!

கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் பல அடுக்குகளைக் கொண்ட இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது..
இந்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த முனையத்தின் கட்டுமாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த முனையத்தை நிர்மாணிப்பதற்கு சுமார் 107 பில்லியன் ரூபாவுக்கு மேலான தொகை செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி திட்டத்திற்கு ஜப்பான் முதலீடு செய்வதுடன் இதனை மூன்றாண்டுகளுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்ள 58 நிபந்தனைகள்!
வடபகுதியில் தொல்பொருள் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை!
மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு வங்கிச் சேவைகள் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|