எதிர்வரும் 15 தொடக்கம் 17 ஆம் திகதி வரை யாழ் மாவட்டத்தில் உச்சம் கொள்ளும் சூரியன்- அவதானமாக இருக்குமாறு பிராந்திய வளிமண்டலத் திணைக்களப் பொறுப்பதிகாரி எச்சரிக்கை!
Friday, April 7th, 2023எதிர்வரும் 14 திகதிக்கு பின்னர் யாழ்.மாவட்டத்திற்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள நிலையில் வெப்பநிலை 35 பாகையை தாண்டும் என யாழ். பிராந்திய வளிமண்டலத் திணைக்களப் பொறுப்பதிகாரி தர்மலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
அத்துடன் மே முதலாம் திகதி வரை அதிகரித்த வெப்பநிலை காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சூரியன் வட துருவம் நோக்கிய பாதையில் நகரும் நிலையில் கடந்த 5 ஆம் திகதி இலங்கைக்கு தெற்காக அம்பாந்தோட்டை பகுதியில் உச்சம் கொண்டிருந்தது. இது நகர்ந்து வரும் நிலையில் எதிர் வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் யாழ்.மாவட்டத்துக்கு மேலாக உச்சம் கொடுக்க உள்ளது.
இதன் காரணமாக தற்போது காணப்படும் 34 பாகை வெப்ப நிலை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர் 35 பாகையை விட அதிக மாக காணப்படும்.
இக்காலப் பகுதியில் யாழ் மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் பெய்யலாம். மழை வேளைகளில் இடி மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதேவேளை யாழ்.மாவட்டத்துக்கு மேலாக எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுப்பதால் கடுமையான வெப்பநிலை காணப்படும். இந்த உயர்வான வெப்பநிலை எதிர்வரும் மே முதலாம் திகதி வரை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|