எதிர்வரும் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கென வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!

Wednesday, December 1st, 2021

இன்றுமுதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கிணங்க, திருமண நிகழ்வுகளில் பங்குபற்றுவோரின் அதிகபட்ச எண்ணிக்கை 200 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு நோய் பரவும் அபாயத்தை குறைக்கும் வகையில், தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் சிறீதரன் அறிவித்துள்ளார்.

அத்துடன் திருமண மண்டபங்களில் அவற்றின் திறனில் மூன்று ஒரு பங்குக்கு மிகாமல் அதிகபட்சம் 200 பேருக்கு மிகாமல் திருமண வைபவங்களை நடத்த முடியும். திறந்தவெளி எனின், 250 பேர் அனுமதிக்கப்படுவர்.

உணவகங்களில் அவற்றின் திறனில் மூன்று ஒரு பங்குக்கு மிகையாகாமல் அதிக பட்சம் 100 பேர் உள்ளிருந்து உணவருந்த அனுமதிக்கப்படுவர். திறந்த வெளியாயின் 150 பேர் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை திரையரங்குகளில் ஒரு காட்சிக்கு இருக்கை எண்ணிக்கையில் 75 வீத பார்வையாளர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதுடன், தொழில்முறை மற்றும் அலுவலகம் சந்திப்புகளில் 150 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: