எதிர்வரும் 14 ஆம் திகதி சீனா செல்கின்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி சீனா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்துடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒரு சுற்றுப் பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விஜயத்தின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதி வயோதிபர் பலி!
போட்டியிடுவதா இல்லையா - கால அவகாசம் நிறைவு!
நெருக்கடி நிலையிலும் மருந்துகள் மீதான கட்டுப்பாட்டுவிலை நீக்கப்படாது - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்பு...
|
|