எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் முற்பதிவு அவசியமில்லை – புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் அறிவிப்பு!

Tuesday, June 2nd, 2020

எதிர்வரும் 10ஆம் திகதியின் பின்னர் புகையிரதத்தில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எஸ்.பொல்வத்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தவாரம் புகையிரதங்களில் பயணிப்பதற்காக சுமார் இருபத்து ஓராயிரம் பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர் என்றும் அவர் தமரிவித்துள்ளார்.

இவ்வாறு பதிவு செய்தவர்களில் நேற்றையதினம் ஏழாயிரத்து 446 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் அரச, தனியார் பணியாளர்கள் புகையிரதத்தில் முன் பதிவு அடிப்படையில் பயணம் செய்ய வேண்டியதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எதிர்வரும் 8ஆம் திகதிமுதல் அனைத்து மாவட்டங்களிலும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் வழமையான நிலையில் செயற்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் இதன்போது முழுமையாக சுகாதார ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அமைச்சருக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின்போதே இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: