எதிர்வரும் வாரம் கொழும்பில் தாக்குதல் நடத்த திட்டம் ? – சரத் பொன்சேகா எச்சரிக்கை!

Thursday, May 9th, 2019

வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை, கொழும்பு கோட்டை ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் எதிர்வரும் 13ஆம் திகதி குண்டு வெடிக்கும் அச்சம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது குறித்த தகவல்கள் கிடைத்திருப்பதாக நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“150 தீவிரவாதிகளில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அப்படியாக இருந்தால் இன்னும் 100 பேர் கைது செய்யபட வேண்டியிருக்கின்றது. இது மிகவும் ஆபத்தான ஒன்று.

உளவுத்துறை பலவீனமடைந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சிலர் விமர்சித்து வந்ததனர்.

உளவுத்துறையில் சிலர் நீக்கப்படுவதன் மூலம் உளவுத்துறை பலவீனமடையவில்லை. மாறாக உளவுத்துறையை தொழிநுட்ப ரீதியில் பலப்படுத்தவில்லை.

இந்நிலையில், வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை, கொழும்பு கோட்டை ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் எதிர்வரும் 13ம் திகதி குண்டு வெடிக்கும் அச்சம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை, கொழும்பு கோட்டை ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிவித்து சுற்றுலாதுறை அதிகார சபை எச்சரிக்கை கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: