எதிர்வரும் வாரத்தில் நீண்ட தூர புகையிரத சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை – இலங்கை புகையிரத சாரதிகள் சங்கபொதுச் செயலாளர் அறிவிப்பு!

Friday, January 15th, 2021

நாட்டில் தற்போதுள்ள கொரோனா நிலைமை காரணமாக செயற்படாதுள்ள நீண்ட தூர புகையிரத சேவைகள் எதிர்வரும் வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை புகையிரத சாரதிகள் சங்க(SLSMU) பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தனவுடன் ஜனவரி 7ஆம் திகதி கலந்துரையாடியுள்ளனர். இதையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் ஏற்பட்டதை அடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதிமுதல் நீண்ட தூர மற்றும் நகரங்களுக்கிடையிலான புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: