எதிர்வரும் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி வெளியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்!

Sunday, January 9th, 2022

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி குறித்த வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமையினால் அவரால் தேர்தலை பிற்போடுவது தொடர்பான வர்த்தமானியை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதானால் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட வேண்டும்.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இங்கிலாந்தில் உள்ளமையினால் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு முடியாமல் உள்ளது.

இந்தநிலையில் தேர்தலை பிற்போடுவதற்கான இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி மற்றுமொரு அமைச்சுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய மற்றுமொரு அமைச்சின் ஊடாக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் ஓராண்டு பிற்போட்டப்பட்டால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி கட்டாயமாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் ஓராண்டு காலப்பகுதிக்கு மாத்திரமே பிறபோட முடியும்.

இந்தநிலையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்துவதற்குத் தயாராக உள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: