எதிர்வரும் முதலாம் திகதிமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Friday, July 23rd, 2021

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதிமுதல் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியுடன் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், அல்லது நீடிக்கப்பட்டாவிட்டாலும், பொதுப்போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு கொவிட்-19 செயலணி அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமாயின் வழமையான முறையில் பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இடம்பெறும்.

அதேநேரம் பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுமாயின் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுப்போக்குவரத்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், பயணக்கட்டுப்பாடுகளின்போது அனுமதி வழங்கப்பட்ட பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபட முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் மக்களுக்காக புதிய விதிமுறைகள் அறிமுகம் - பதில் பொலிஸ் மா அதிப...
அபாயகரமானநிலையைகருத்திற்கொண்டுவீட்டில்இருந்து கற்றலை முன்னெடுங்கள் - மாணவர்களிடம் இலங்கைதமிழ்ஆசிரியர...
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்காக மாணவர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்...

இலங்கை கிரிக்கெற் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குமாறு அர்ஜுனவிடம் அமைச்சர் நாமல் கோரிக்கை!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டில் தனிமைப்படுத்துவதற்கான காலப்பகுதி 07 நாட்களாகக் குறைப்பு!
அரச சேவையின் செலவீனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலை...