எதிர்வரும் புதன்கிழமை புதிய அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டம் – இன்று கடமைகளை பொறுப்பேற்றனர் அமைச்சர்கள்!

Thursday, August 13th, 2020

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அமைச்சரவையின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

அதன்படி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, பவித்ரா வன்னியாராச்சி, ஜீ.எல்.பீரிஸ், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வாசுதேவ நாணயக்கார மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகிய அமைச்சர்களே இவ்வாறு கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

அத்தோடு டீ.வி சானக, சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளை, நாலக கொடஹேவா மற்றும் பியல் நிஷாந்த ஆகிய இராஜாங்க அமைச்சர்களும் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் புதிய அமைச்சரவையின் முதலாவது கன்னி அமர்வு எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றையதினம் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்களும் 39 இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: