எதிர்வரும் புதனன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் – 13 ஆவது திருத்தம் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் விவாதிக்கப்படும் என தகவல்!

அனைத்துக் கட்சிக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் 13வது திருத்தம் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பாக இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்தியாவிற்கான விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, 13வது திருத்தம் குறித்தும் ஜனாதிபதியிடம் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மரக்கறிகளின் விலை வீழ்ச்சி!
காற்று சீராக்கி இயந்திர பயன்பாட்டுக்கு புதிய சட்டவிதி!
ஏப்ரல் 8 இல் தொண்டர் ஆசிரியர் நேர்முகம் !
|
|