எதிர்வரும் திங்கள்முதல் மூடப்பட்ட பொது சந்தைகளை திறக்கலாம் – திருமண நிகழ்வில் 150 பேரை அழைப்பதற்கும் வடக்கு மாகாண சுகாதார பிரிவு அனுமதி!

Friday, January 15th, 2021

கொரோனா அச்சம் காரணமாக வடமாகாணத்தில் முடக்கப்பட்டிருந்த அனைத்து சந்தைகளையும் மீள திறப்பதற்கு மாகாண சுகாதார பிரிவு அனுமதியளித்துள்ளது.

சந்தைகளை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல் ஒன்று இன்று காலை மாகாண சுகாதார பணிப்பாளர் தலமையில் நடைபெற்றபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதன்படி எதிர்வரும் திங்கள்கிழமை தொடக்கம் மாகாணத்தில் உள்ள சகல சந்தைகளையும் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் திருமண மண்டபங்களை திறக்கவும் மீள திறப்பதற்கு மாகாண சுகாதார பிரிவு அனுமதியளித்தள்ளது. இதற்கிணங்க திருமண மண்டபங்களில் 150 பேருடன் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதென இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: